கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன், சுங்கை லிங்கி ஆற்றில், கார் ஒன்று விழுந்ததில், Shah Alamஐ சேர்ந்த ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு குழந்தைகள், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர், Datuk Alzafny Ahmad கூறுகையில்,
இந்தச் சம்பவம், குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ், விசாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, அந்த இரு குழந்தைகளுடைய தந்தை எனக் கருதப்படும் ஒரு ஆடவரும், 41 வயதுப் பெண்ணும், அவர்களது வாக்குமூலத்தில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே ,கைது செய்யப்பட்ட ஆடவருக்கு, 16 குற்றப் பதிவுகள் உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் சிக்கிய கார், காணாமல் போனதாக, முன்னர் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இரு சந்தேக நபர்களும், போதைப்பொருள் பரிசோதனை, போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நீரில் மூழ்கிய காரில், சிக்கியிருந்த குழந்தைகள், பின்னர் மீட்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். இதற்கிடையில், அந்தப் பெண், பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார்.
இந்த விபத்து குறித்து, ஏதேனும் தகவல் தெரிந்தால், விசாரணை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு, காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.