ஜோர்ஜ் டவுன்:
தீபாவளி பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 20ஆம் தேதி பினாங்கில் இலவச படகு சேவை வழங்கப்படுகின்றது.
அன்றைய தினம் மலேசிய பயணிகளுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்று பினாங்கு துறைமுக ஆணையம், பினாங்கு துறைமுக நிறுவனம் இணைந்து சமூக வலைத்தளங்களின் வாயிலாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
அட்டவணையிடப்பட்டுள்ள படகு சேவையில் மலேசியர்களுக்கு இந்த இலவச சலுகை வழங்கப்படுகிறது.
இந்த சலுகைகளை பெறுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் படகுதுறையில் தங்கள் MyKad/MyKid அட்டைகளை காண்பிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.