கோலாலம்பூர்:
பண்டார் ஸ்ரீ டாமன்சாரா பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்தச் சிறுமி கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 11) மாலை 5 மணியளவில் தியாகா அபார்ட்மெண்ட், ஜாலான் தமர் SD15/6, பண்டார் ஸ்ரீ டாமன்சாரா பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என்று, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஷம்சுதின் மமட் தெரிவித்ததாவது:
“இந்தச் சம்பவம் தொடர்பாக அக்டோபர் 14 ஆம் தேதி மாலை 4.50 மணியளவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது,” என்றார்.
காணாமல் போன சிறுமியின் பெயர் கலேசியா மெடினா ரோசலெய்ன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், உயரம் 148 செ.மீ., எடை 48 கிலோ. நடுத்தர பழுப்பு நிறம் கொண்ட இவர், கடைசியாக காணப்பட்டபோது துடுங் (மொட்டாக்கு) அணிந்திருந்தார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் இருப்பிடத்தைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் தகவல் அளிக்கவோ, அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் செயல்பாட்டு அறை – 03-7966 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவோ கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் இசாஹிதா இதாம் (தொலைபேசி: 010-251 3690) என்பவரை நேரடியாக தொடர்புகொண்டு உதவலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி பற்றிய எந்தவொரு தகவலும் விசாரணைக்கு முக்கியமானதாக இருக்கும் என போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.