கோலாலம்பூர்:
47ஆவது ஆசியான் மாநாடு காரணமாக, அக்டோபர் 26 முதல் 28 வரை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் மொத்தம் 25 பிரதான சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூடப்படும் சாலைகளில் ஆறு முக்கிய நெடுஞ்சாலைகள் அடங்கும் என புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு இயக்குநர் யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறினார்.
அவை:
Elite (North–South Expressway Central Link)
NKVE (New Klang Valley Expressway)
Guthrie Corridor Expressway
North–South Expressway
MEX Highway
KL–Seremban Expressway
யுஸ்ரி ஹசான் மேலும் தெரிவித்ததாவது, மாநாடு நடைபெறும் நாட்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று வழிகள் பற்றிய விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும், பொதுமக்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே அமைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.