Offline
Menu
1953 எவரெஸ்ட் சாதனை: உயிருடன் இருந்த கடைசி உறுப்பினர் காஞ்சா ஷெர்ப்பா காலமானார்
By Administrator
Published on 10/18/2025 09:00
News

காத்மாண்டு:

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் மலையை முதன்முறையாக அடைந்த வரலாற்றுப் புகழ் பெற்ற 1953 ஆம் ஆண்டுக்கான மலையேற்றக் குழுவில் உயிருடன் இருந்த கடைசி உறுப்பினரான காஞ்சா ஷெர்ப்பா (Kanchha Sherpa) காலமானார்.

92 வயதான அவர், நேப்பாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 16) மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் பேரன் தென்சிங் சோக்யால் ஷெர்ப்பா தெரிவித்ததாவது, “அவருக்கு சில நாட்களாக தொண்டை பிரச்சினை இருந்தது. இதைத் தவிர வயதை கருத்தில் கொண்டால் பெரும் உடல்நலக்குறைவு எதுவும் இல்லை,” என கூறினார்.

நேப்பாள மலையேற்ற சங்கத் தலைவர் ஃபுர் கெல்ஜே ஷெர்ப்பா, ஃபேஸ்புக்கில் மரியாதை செலுத்தி, “காஞ்சா ஷெர்ப்பாவின் மறைவு நேப்பாளத்தின் மலையேற்ற சமூகத்திற்கு பேரிழப்பு,” என தெரிவித்தார்.

1932 ஆம் ஆண்டு எவரெஸ்ட் மலையடிவாரத்தில் அமைந்த நாம்சே பஸார் பகுதியில் ஆங் ஃபுர்பா ஷெர்ப்பா என்ற பெயரில் பிறந்த அவர், இளமையிலேயே வேலை தேடி வீட்டை விட்டு தப்பி, இந்தியாவின் டார்ஜிலிங் நகருக்குச் சென்றார். அங்கு அவர் மலையேற்றப் பயிற்சி பெற்றார்.

அங்கேயே அவர் புகழ்பெற்ற நேப்பாள மலையேறி தென்சிங் நோர்கேவை சந்தித்தார். நோர்கே அவரை 1953 ஆம் ஆண்டு எட்மண்ட் ஹிலரி தலைமையிலான எவரெஸ்ட் மலையேற்றக் குழுவின் ஆதரவு குழுவில் சேரச் செய்தார்.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியில் எட்மண்ட் ஹிலரி மற்றும் தென்சிங் நோர்கே எவரெஸ்ட் சிகரத்தை முதன்முறையாக அடைந்தனர் — காஞ்சா ஷெர்ப்பா அந்த சாதனையின் பின்தள நாயகனாக நினைவுகூரப்படுகிறார்.

Comments