Offline
Menu
தீபாவளியை முன்னிட்டு KL Sentral முதல் Kluang வரை மின்சார ரயில் ரிக்கெட்டுகளுக்கு 30% தள்ளுபடி!
By Administrator
Published on 10/18/2025 09:00
News

கோலாலம்பூர்:

வரும் 20ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளியை முன்னிட்டு, KL Sentral–Kluang இடையிலான எலக்ட்ரிக் ரயில் சேவை (ETS) டிக்கெட்டுகளில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக KTMB நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தள்ளுபடி அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

பயணிகள் தங்கள் சீட்டுகளை முன்பதிவு செய்யும் போது “GO2KLUANG30” என்ற ப்ரொமோ கோட்டைக் கொடுத்து தள்ளுபடியைப் பெறலாம் என்று, KTMB நிறுவனத்தின் தொழில்நுட்ப தலைமை அதிகாரியும் குழுமத்தின் செயல் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள அமாட் நிசாம் முகமட் அமின் தெரிவித்தார்.

மொத்தம் 5,000 ப்ரொமோ கோடுகள் வழங்கப்படவுள்ளன, குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அவை பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

தீபாவளி காலத்தில் அதிகரிக்கும் பயணத் தேவையை கருத்தில் கொண்டு, KTMB அக்டோபர் 16 முதல் 26 வரை 278,792 பயண டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. இதில்,

121,128 ETS டிக்கெட்டுகள்,

46,684 KTM Intercity டிக்கெட்டுகள், மற்றும்

107,200 Shuttle Tebrau (சிங்கப்பூர் சேவை) டிக்கெட்டுகள் அடங்கும்.

மேலும், அக்டோபர் 17 முதல் 22 வரை KL Sentral–Padang Besar–KL Sentral வழித்தடத்தில் இரண்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளன; இதற்கான 3,780 கூடுதல் டிக்கெட்டுகள் ஏற்கனவே அக்டோபர் 7 முதல் விற்பனைக்கு வந்துள்ளன என்று அவர் சொன்னார்.

பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, KTMB நிறுவனம் கூடுதல் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை முக்கிய நிலையங்களில் நியமித்துள்ளது என்று கூறினார்.

அத்துடன், பயணிகள் தங்களின் ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் நிலையத்தை அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது; ஏனெனில் பயண நுழைவு கதவுகள் ரயில் புறப்படும் ஐந்து நிமிடங்களுக்கு முன் மூடப்படும் என்றார்.

மேலும் தகவல்களுக்கு www.ktmb.com.my என்ற இணையதளத்தையோ அல்லது KTMB அழைப்புக்குழுவை (03-9779 1200) தொடர்புகொள்கலாம்.

Comments