ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறோம் என்று இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி பேசியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி பாகிஸ்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கர் மாவட்டத்தில் ராணுவ வீரர்களிடம் பேசிய உபேந்திர திவேதி, “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் முதல் தூணாக மாறி பொதுமக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது” என்று தெரிவித்தார்.