சரவாக், கூச்சிங்கில் உள்ள ஜாலான் கூச்சிங்-சமரஹான் விரைவுச்சாலையில் லோரியின் கீழ் இழுத்துச் செல்லப்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார். மலேசியா சரவாக் பல்கலைக்கழக (யுனிமாஸ்) போக்குவரத்து விளக்குகள் அருகே பெண் மற்றும் ஒரு ஆணுடன் சென்ற மோட்டார் சைக்கிள் ஒரு காரின் மீது மோதியது. மோதல் அவரை லோரியின் கீழ் தள்ளி, 40 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது.
அவசர அழைப்பு வந்ததுடன் சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கோத்தா சமரமஹான் நிலையத்திலிருந்து ஆறு பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது. விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்ததை அவர்கள் கண்டதாக தயக் டெய்லி தெரிவித்துள்ளது.
காரின் பெண் ஓட்டுநர் மற்றும் ஆண் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.