Offline
Menu
தைவானை மிரட்டும் ‘பங்வோங்’ புயல் – 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து வெளியேற்றம்
By Administrator
Published on 11/13/2025 15:51
News

தைபே,பசிபிக் பெருங்கடலில் உருவான ‘பங்வோங்’ புயல், சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியை தாக்கியது. இந்த புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து இந்த புயல் தைவான் நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த புயல் தைவானின் தென்மேற்கு பகுதியை நெருங்கும்போது காற்றின் வேகம் மணிக்கு சுமார் 72 முதல் 101 கி.மீ. வரை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது புயலின் வேகம் சற்று குறைந்திருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவானில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், தைவானின் சில பகுதிகளில் தற்போது கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. கிழக்கு ஹுவாலியன் பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால், அங்குள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments