அபுஜா,ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 2022-ம் ஆண்டு பள்ளிகளில் தாய்மொழி கல்வி கட்டாயமாக்கப்பட்டது. எனவே ஆங்கிலத்துக்கு பதிலாக அந்தந்த பிராந்திய மொழிகளில் மாணவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டது. இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும் அவர்களது கற்றல் திறன் மோசமடைந்ததாக கூறப்பட்டது. மேலும் உயர்கல்வியில் இடைநிற்றல், வெளிநாட்டினருடன் தொடர்பு கொள்வதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களை ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே கட்டாய தாய்மொழி கல்வி சட்டத்தை ரத்து செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை ஆங்கில வழிக்கல்வியே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என கல்வித்துறை மந்திரி துஞ்சி அலாசா அறிவித்தார்.
அதே நேரம் தாய்மொழி மூலம் பயில்வதே மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனை அதிகரிக்கும். எனவே இந்த சட்டத்தை ரத்து செய்யக்கூடாது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.