Offline
Menu

LATEST NEWS

வியட்நாமில் கனமழை, வெள்ளம்; 9 பேர் பலி
By Administrator
Published on 11/16/2025 02:13
News

ஹனோய்,ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தின் ஹங்க், டா நங், ஹைய் அன் ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, 5 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான நிலையில் மீட்பு, நிவாரணப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments