Offline
Menu
பிரேசில்: இன்ஸ்டா பிரபலம் மர்ம மரணம்
By Administrator
Published on 11/18/2025 09:00
News

பிரேசிலா,தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் ரியோ டி ஜெனிரோவை சேர்ந்தவர் டயானா ஏரியாஸ் (வயது 39). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார். இவரை சுமார் 2 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வந்தனர்.

 

இந்நிலையில், ரியோ டி ஜெனிரோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த டயானா ஏரியாஸ் மர்மமான முறையில் உயிரிழந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்து அவர் கீழே விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா? வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments