வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) நவம்பர் 19 முதல் நவம்பர் 21 வரை ஆறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை நிலை தொடர் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதில் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் (கெரியன், லாரூட், மாடாங், செலாமா, உலு பேராக் கோல கங்சார்) ஆகிய மாநிலங்களும் அடங்கும் என்று மெட்மலேசியா கூறியது. கிளந்தான், திரெங்கானு (Besut, Setiu, Kuala Nerus, Hulu Terengganu, Kuala Terengganu, Marang) போன்றவற்றுக்கும் இதே போன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.