லக்னோ,உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சனிக்கிழமை கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களாக நடைபெற்ற மீட்புப்பணியில் 7 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, பாறை இடிபாடுகளை அகற்ற முடியாததால் மீட்புப்பணிகள் கைவிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் எஞ்சிய 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளது.