புதுடெல்லி:
டெல்லி தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாக புல்வாமாவைச் சேர்ந்த 28 வயதான மருத்துவர் முஜம்மில் ஷகீல் மற்றொரு பெண் மருத்துவர் ஷாகின் சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஷாகின், முஜம்மில் ஆகியோர் மாருதி பிரெஸ்ஸா காரை வாங்கும்போது புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டுள்ளனர். அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பின்னர் இந்த காரை அவர்கள் பணிபுரிந்த அல் பலா பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மொத்தம் 32 கார்களை வாங்கி பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த அந்த மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதில், மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா காரும் ஒன்று. தாக்குதல் நடத்துவதற்காக வாங்கப்பட்டிருந்த கார்களில் மூன்றை இதுவரை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஷாகின், முஜம்மில் வாங்கிய மாருதி பிரெஸ்ஸா கார் சிஎன்ஜி மாடல் ஆகும். கடந்த செப்டம்பர் 25-ம் தேதி முழு பணத்தை கொடுத்து அவர்கள் இந்த காரை வாங்கியுள்ளனர்.