கோல திரெங்கானு,
மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia), இன்று வெளியிட்ட தொடர்ச்சியான மழை எச்சரிக்கையையடுத்து, தெரங்கானுவில் மூன்று மாவட்டங்களில் உள்ள 17 கிராமங்கள் வெள்ள அபாயத்தில் உள்ளதாக மாநில வடிகால் மற்றும் நீர் வளத்துறை (JPS) தெரிவித்துள்ளது.
கோல திரெங்கானுவில் Kampung Lubuk Periuk, Kampung Peneh, Kampung Kuala Ping, Kampung Kepah, Kampung ibong aமற்றும் Kampung Kemat போன்ற பகுதிகள் ஆபத்தான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என JPS இயக்குநர் உஸ்மான் அப்துல்லா கூறியுள்ளார்.
பெசுட் மாவட்டத்தில் e Kampung Keruak, Kampung Belaoh, Kampung La, Kampung Batu 13, Kampung Bekok மற்றும் Kampung Bukit Payong பகுதிகள் வெள்ளத்திற்குள்ளாகும் நிலையில் உள்ளன. செத்தியூவில் e Kampung Hulu Seladang, Kampung Besut, Kampung Padang, Kampung Lubuk Panjang மற்றும் Kampung Gong Terap ஆகியவை வெள்ளம் வரக்கூடிய கூடிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆறுகளில் நீர்மட்டத்தை கண்காணித்தல், தொடர்புடைய முகமைகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் வெள்ள செயல்பாட்டு அறைகளைத் திறக்க முன்ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரபூர்வ எச்சரிக்கைகளை கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு JPS வேண்டுகோள் விடுத்துள்ளது.