Offline
Menu
10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்த எரிமலை
By Administrator
Published on 11/25/2025 21:14
News

ஏடிஸ் அபாபா,கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அபார் மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. எரித்திரியா நாட்டின் எல்லை அருகே இந்த எரிமலை அமைந்துள்ளது.

இதனிடையே, ஹேலி குப்பி எரிமலை கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளாக எந்தவித வெடிப்பும் இன்றி அமைதியான இருந்து வந்தது.

இந்நிலையில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஹேலி குப்பி எரிமலை இன்று வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comments