லஹாத் டத்து: ஜாலான் லஹாத் டத்து-தவாவின் KM33இல் பல்நோக்கு வாகனம் (MPV) ஒரு டிரெய்லர் லோரியுடன் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு எட்டு வயது சிறுவன் காயமடைந்தான்.
லஹாத் டத்துவிலிருந்து தவாவுக்குச் சென்ற டொயோட்டா இன்னோவாவை ஓட்டிச் சென்ற நபர், பல கார்களை முந்திச் சென்று டிரெய்லருடன் நேருக்கு நேர் மோதியபோது இந்த விபத்து ஏற்பட்டதாக லஹாத் டத்து காவல்துறைத் தலைவர் துல்பஹரின் இஸ்மாயில் தெரிவித்தார்.
40 வயதான MPV ஓட்டுநம் 39, 43 வயதுடைய இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். டொயோட்டாவில் பயணித்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு லஹாத் டத்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
56 வயதான டிரெய்லர் ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக துல்பஹரின் கூறினார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.