Offline
Menu
அமெரிக்காவில் எரிமலை வெடிப்பு – 400 அடி உயரத்திற்கு வெளியேறிய நெருப்பு குழம்பு
By Administrator
Published on 11/27/2025 08:13
News

வாஷிங்டன்,அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்காவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை, உலகிலேயே மிகவும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இந்நிலையில், கிலாவியா எரிமலை 25-ந்தேதி(நேற்று) மதியம் 2.30 மணியளவில் வெடித்து சிதறியது.

எரிமலை வெடிப்பை தொடர்ந்து, அதில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. இந்த நெருப்பு குழம்பானது சுமார் 400 அடி உயரம் வரை மேல்நோக்கி எழுந்தது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தொடர்ந்து இந்த எரிமலையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதற்கு முன்பு கடந்த காலங்களில் கிலாவியா எரிமலையில் வெடித்தபோது சுமார் 20 ஆயிரம் அடி உயரம் வரை நெருப்பு குழம்பு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது காற்றின் வேகம் காரணமாக எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் உள்ளிட்டவை தென்மேற்கு திசை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாகவும், தற்போது வரை ஹவாய் விமான நிலையத்தில் விமான போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments