கோலாலம்பூர்:
புக்கிட் சீனாவில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்து சம்பந்தமாக, சிலாங்கூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரும் மற்றொரு ஆண் சந்தேகநபரும் மலாக்கா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் சம்பவத்தில் தொடர்பு படுவதாக போலீசார் நம்புகின்றனர் என்று , மலாக்கா மாநில போலீஸ் உதவி ஆணையர் கிரிஸ்டப்பர் பாடிட் கூறினார்.
சம்பவத்தின்போது அந்த பகுதியில் பதிவாகிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், இருவர் காரில் வந்து, எரியும் பொருளை ஒரு வீட்டை நோக்கி தூக்கி வீசும் காட்சி பதிவாகியுள்ளதைக் காவல்துறை கண்டுபிடித்துள்ளது என்றார் அவர்.
இந்த சாட்சியத்தின் அடிப்படையில், கடந்த திங்கட்கிழமை அந்த பெண்ணும் மற்றொரு ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கிரிஸ்டப்பர் பாடிட் கூறினார்.