Offline
Menu
சுமத்ராவின் வடமேற்கு கடற்கரையில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
By Administrator
Published on 11/28/2025 09:00
News

இன்று மதியம் 12.56 மணிக்கு சுமத்ராவின் வடமேற்கு கடற்கரையில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களில் நிலநடுக்கங்களை ஏற்படுத்தியது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சிமியூலுவிலிருந்து தெற்கே 8 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி 2.7°N, 95.9°E மற்றும் 57கி.மீ ஆழத்தில் இருந்தது. தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அது ஒரு  முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

 

Comments