கோலா திரெங்கானுவில் தாய் ஏமாற்றம்: மகன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி மோசடி – RM184,500 சேமிப்புப் பறிபோனது, பிரிவு 420-இன் கீழ் விசாரணை!
கோலா திரெங்கானு, நவம்பர் 27:
தனது மகன் சுங்கை புலோ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவசரச் செலவுகளுக்குப் பணம் தேவை என்றும் கூறி மோசடி செய்தவரின் அழைப்பை நம்பிய 63 வயதுடையத் தாய் ஒருவர், தனது RM184,500 சேமிப்பை இழந்துள்ளார்.
மோசடிக்காரரின் கதையை நம்பிய அவர், அக்டோபர் 9 முதல் நவம்பர் 24 வரை 21 வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளார்.
பணம் செலுத்திய பிறகு அவர் தனது மகனையோ அல்லது அழைத்தவரையோ தொடர்புகொள்ள முடியவில்லை.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, போலீசில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் ஏமாற்றுதல் தொடர்பாக விசாரிக்கப்படுகிறது
குற்றவாளிகள் பெற்றோரின் அன்பு மற்றும் பயத்தை எவ்வளவு கொடூரமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
எனவே, பொதுமக்கள் எந்த நிதியையும் பரிமாற்றம் செய்வதற்கு முன், இதுபோன்றக் கோரிக்கைகளை மருத்துவமனைகள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் நேரடியாகச் சரிபார்க்குமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.