சிப்பாங்:
காணாமல் போன 23 வயது போலீஸ் கான்ஸ்டபிள் முகமட் ரஹிமி அமிருதீனின் உடல் மீட்கப்பட்டது.
சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் நோர்ஹிசாம் பஹாமன் குறித்த போலீஸ்காரரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
“காணாமல் போன போலீஸ்காரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் வாட்ஸ்அப் மூலம் ஒரு சுருக்கமான பதிலில் அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் பணிக்குச் சென்று கொண்டிருந்த போது, அவரின் பெரோடூவா பெஸ்ஸா கார் வெள்ளம் சூழ்ந்த வடிகால் பள்ளத்தில் கவிழ்ந்ததில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போனார்.