மலாக்கா:
மலாக்காவைச் சேர்ந்த 61 வயது ஆடவர் ஒருவர், கடந்த நவம்பர் 23 அன்று நடைபெற்ற டோட்டோ 4D ஜாக்பாட் 1 இல் பங்கேற்று, RM20.17 மில்லியன் பரிசுத்தொகையை வென்று பெரும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார்.
RM20.32 மில்லியன் மதிப்பிலான ஜாக்பாட் தொகையில், ‘5641’ மற்றும் ‘1927’ என்ற எண் சேர்த்தல்களுக்கு RM2 பந்தயம் வைத்திருந்த அவர், மொத்தமாக RM20,169,749.30 பெற்றார்.
முன்பு செம்பனை தோட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றிய இந்த ஓய்வு பெற்ற நபர், தனது பரிசைப் பெற நண்பருடன் STM Lottery Sdn Bhd தலைமையகத்துக்குச் சென்றார்.
அதிர்ஷ்ட எண்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்று விளக்கும்போது, “ஒரு மாலில் அருகருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு நீல நிற ஸ்போர்ட்ஸ் கார்களைப் பார்த்த பிறகு இந்த எண்களைத் தேர்ந்தெடுத்தேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக டோட்டோ விளையாடி வருகிறேன். ஒருநாள் பெரிய அளவில் வெல்வேன் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் இவ்வளவு பெரிய தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்றார்.
மேலும் ஜாக்பாட் வென்றதை அறிந்ததும் பல இரவுகள் தூக்கமின்றி கழிந்ததாகவும் அவர் கூறினார்.