Offline
Menu

LATEST NEWS

சமூக ஊடகங்கள் மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், இலவசப் பரிசுகளுக்கும் இனி வரி!
By Administrator
Published on 01/20/2026 12:00
News

கோலாலம்பூர்:

சமூக ஊடகங்கள் மூலம் வருமானம் ஈட்டும் நபர்கள், தங்களுக்குக் கிடைக்கும் பணம் மட்டுமல்லாது, விளம்பரங்களுக்காகப் பெறும் இலவசப் பொருட்கள் மற்றும் பரிசுகளையும் வருமானமாகக் கணக்கிட்டு வரித் துறையிடம் (LHDN) சமர்ப்பிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் அதிகப் பின்தொடர்பாளர்களைக் கொண்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டும் அனைவரும் ‘இன்ஃப்ளூயன்சர்’ என்ற தொழிலைச் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள். இவர்கள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்:

தனிநபர் இன்ஃப்ளூயன்சர்கள்: அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மற்றையது பொருள் சார்ந்த இன்ஃப்ளூயன்சர்கள்: அனிமேஷன் கதாபாத்திரங்கள் அல்லது சமூக ஊடகங்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேகக் கதாபாத்திரங்கள் போன்றவையும் அடங்கும்.

சமூக ஊடகத் தளங்களிலிருந்து நேரடியாகப் பெறும் பணம் மற்றும் விளம்பர தூதராக (Brand Ambassador) செயல்படுவதற்கான கட்டணம் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் அல்லது ஐடி-களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம் ஆகியவை வருமானம் என்ற ரீதியில் கணக்கிடப்படும்.

மேலும் ரொக்கம் தவிர்த்து வழங்கப்படும் பொருட்கள், தள்ளுபடி வவுச்சர்கள், இலவசச் சேவைகள் மற்றும் பண மதிப்புடைய சமூக ஊடகப் பரிசுகள் (Gifts/Emojis).

இதில் இணையக் கட்டணம், படப்பிடிப்பு மற்றும் எடிட்டிங் செலவுகளை வரியிலிருந்து விலக்காகக் கோரலாம். ஆனால், தனிப்பட்ட செலவுகளுக்கு இது பொருந்தாது என்றும் கூறப்படுகிறது.

வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், வரி அறிக்கை தாக்கல் செய்த ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் LHDN அதிகாரிகள் தணிக்கை (Audit) செய்ய வரக்கூடும்.

இந்த புதிய விதிமுறைகள் இன்ஃப்ளூயன்சர்கள் தங்களின் வரிப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதை உறுதி செய்யக் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments