Offline
Menu
டீசல் விலை லிட்டருக்கு RM5.52 ஆக உயர்வு: ‘Budi Diesel’ நிதியுதவியை RM300-ஆக உயர்த்தியது மலேசியா!
By Administrator
Published on 03/28/2026 10:00
News

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மலேசியாவில் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனைச் சமாளிக்க, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ரொக்க உதவியை அரசாங்கம் அதிரடியாக உயர்த்தியுள்ளது.

உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக மலேசியாவின் எரிபொருள் விலையில் பின்வரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன:

தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு RM5.52 ஆக உயர்ந்துள்ளது அதேநேரம் சபா, சரவாக் & லபுவான் ஆகிய கிழக்கு மலேசியப் பகுதிகளில் டீசல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு RM2.15 என்ற மானிய விலையிலேயே நீடிக்கிறது.

அதேநேரம் RON95 பெட்ரோலை தகுதியுள்ள மலேசியர்கள் ‘Budi95’ திட்டத்தின் கீழ் தொடர்ந்து RM1.99 விலையில் பெட்ரோலைப் பெற்றுக்கொள்ளலாம்.

டீசல் விலை உயர்வால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்க, ‘Budi Diesel’ திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி RM100 உயர்த்தப்பட்டுள்ளது.

தகுதியுள்ள தனிநபர்கள் (Budi Individu) மற்றும் சிறு விவசாயிகள் (Budi Agri-Komoditi) இனி மாதம் RM300 நிதியுதவியைப் பெறுவார்கள் இந்த தொகை முன்பு RM200 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments