Offline
Menu

LATEST NEWS

தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு: ஜோகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1-இல் வாக்குப்பதிவு!
By Administrator
Published on 06/13/2026 08:00
News

கோலாலம்பூர்:

மலேசியாவின் ஜோகூர் மாநிலத் தேர்தல் வரும் ஜூலை 11-ஆம் தேதி அன்றும், நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்றும் நடைபெறும் என்று தேசிய தேர்தல் ஆணையம் (EC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

புத்ராஜெயாவில் உள்ள தேர்தல் ஆணையத் தலைமையகத்தில், அதன் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹரூண் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய உயர்மட்டச் சிறப்பு கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையத் தலைவர் வெளியிட்ட இரு மாநிலங்களின் முக்கியத் தேர்தல் தேதிகள் பின்வருமாறு:

ஜோகூர் மாநிலத் தேர்தல் (Johor State Election)

வேட்புமனுத் தாக்கல் நாள்: ஜூன் 27

முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் (Early Voting): ஜூலை 7

வாக்குப்பதிவு நாள் (Polling Day): ஜூலை 11

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் (Negri Sembilan State Election)

வேட்புமனுத் தாக்கல் நாள்: ஜூலை 18

முன்கூட்டியே வாக்களிக்கும் நாள் (Early Voting): ஜூலை 28

வாக்குப்பதிவு நாள் (Polling Day): ஆகஸ்ட் 1

மலேசிய அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இரு மாநிலத் தேர்தல்களும், முறையே கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஜோகூர் சட்டமன்றமும், ஜூன் 5-ஆம் தேதி நெகிரி செம்பிலான் சட்டமன்றமும் முறைப்படிக் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments