Offline
Menu
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்: முதல்-அமைச்சர் விஜய் எச்சரிக்கை
By Administrator
Published on 07/17/2026 09:00
News

சென்னை, முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்விவரம்:-

ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும். தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்றெல்லாம் பார்க்கமாட்டேன். தவறு நடந்தது தெரிந்தால் பதவி உடனே பறிக்கப்படும். தனது தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். தவெக அரசு லஞ்சமற்ற அரசாக இருக்க வேண்டும் என்பதில் அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும். ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தின் போது குறிப்பிட்ட சில அமைச்சர்களை குறிப்பிட்டு முதல்-அமைச்சர் விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments