ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் நடவடிக்கைகளுக்கான அமெரிக்காவின் செலவு 37.5 பில்லியன் டாலர்களாக (சுமார் $37.5 Billion) அதிகரித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார். தொடக்கத்தில் கணிக்கப்பட்டதை விட போர்ச் செலவுகள் வேகமாக உயர்ந்து வருவதாக பென்டகன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.