ஜொகூர் போரஸ்ட் சிட்டியில் இயங்கி வந்த NSO மலேசியாவின் வணிக உரிமத்தை இஸ்கந்தர் புத்ரி மாநகராட்சி (MBIP) ரத்து செய்ததை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 'மலேசியா டிஜிட்டல்' (MD) அந்தஸ்தை உடனடியாக திரும்பப் பெறுவதாக மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (MDEC) அறிவித்துள்ளது. நாட்டின் சட்டதிட்டங்களை மீறும் எந்த நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்கப்படாது என MDEC தெளிவுபடுத்தியுள்ளது.