கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 'Food and Drinks Malaysia' (FDM) சர்வதேசக் கண்காட்சியில் வர்த்தக விற்பனை RM1.08 பில்லியனை (US$ 265 Million) தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலி சவால்களுக்கு மத்தியிலும், ஆசியான் பிராந்தியத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்த இக்கண்காட்சி பெரும் பாலமாக அமைந்துள்ளது.