Offline
Menu
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: முற்கூட்டிய வாக்குப்பதிவு நிறைவு; 91.06% அதிக அளவிலான வாக்குகள் பதிவு!
By Administrator
Published on 07/29/2026 18:00
News

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப்பதிவு (Early Voting) இன்று மாலை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் தகுதிபெற்ற 16,467 வாக்காளர்களில் 91.06 விழுக்காட்டினர் (14,995 பேர்) தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

இத்தகவலைத் தேர்தல் ஆணையத்தின் (EC) செயலாளர் டத்தோ கைருல் ஷஹ்ரில் இத்ருஸ் (Datuk Khairul Shahril Idrus) இன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதுகாப்புப் படை வீரர்கள் (இராணுவத்தினர்), அவர்களின் துணைவியர் மற்றும் காவல் துறையினருக்காக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 38 வாக்குப்பதிவு மையங்களில் காலை 8:00 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, நண்பகல் 12:00 மணிக்கு 18 மையங்கள் மூடப்பட்டன, பிற்பகல் 2:00 மணிக்கு 2 மையங்கள் மூடப்பட்டன. மேலும் மாலை 5:00 மணிக்கு மீதமுள்ள 18 மையங்களும் மூடப்பட்டு வாக்குப்பதிவு நிறைவுற்றது.

Comments