Offline
Menu
எல் நினோ காலநிலை மாற்ற நிகழ்வு குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு
By Administrator
Published on 07/31/2026 16:00
News

சென்னை,எல் நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வு – பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகரிப்பதால் உருவாகும் எல் நினோ (El Nino) எனும் காலநிலை மாற்ற நிகழ்வு, உலகளாவிய மழைப்பொழிவு மற்றும் வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகும். எல் நினோ நிகழ்வானது பொதுவாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை உருவாகும். கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயரும்போது அது தீவிர எல் நினோ எனக் கருதப்படுகிறது.

வானிலை

வானிலை ஆய்வுகளின்படி, 2026ஆம் ஆண்டு தீவிர எல் நினோ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, தென்மேற்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்யக்கூடும். மேலும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அதீத மழை, வெள்ளம் உள்ளிட்ட தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தீவிர எல் நினோவால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அறிவியல் அடிப்படையில் முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையின் கீழ் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு “தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை” யின் கீழ் பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவை அமைக்க ஆணையிடப்பட்டது.

அக்குழுவில் காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல், கடலோர வள மேலாண்மை, நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அனுபவம் பெற்ற பின்வரும் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Comments