Offline
Menu
பேருந்து மோதி இந்திய மாது பலி
By Administrator
Published on 08/01/2026 15:00
News

பத்துமலை வளாகத்தில் பேருந்து கடக்கும் பகுதியில் சுற்றுலா பேருந்து ஒன்று மோதி, ஓர் இந்தியப் பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் நிகழ்ந்தது.

தமிழகம் கடலூரை சேர்ந்தவர் என்று நம்பப்படும் 54 வயது கோகுல நாயகி என்ற சுந்தரி என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது. பத்துமலைத் திருத்தலத்தில் கழிப்பறையை பயன்படுத்தி விட்டு, அதன் வளாகத்தை கடக்கும் போது, சுற்றுலா பேருந்து அவரை மோதித்தள்ளியதாக கூறப்படுகிறது.

தலையில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த இந்தியப் பிரஜை, சம்பவ இடத்திலேயே மாண்டார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Comments