Offline
Menu
பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி பலி
By Administrator
Published on 08/03/2026 15:00
News

இஸ்லாமாபாத், பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையேற்ற வீரர்

‘நிம்ஸ் டாய்’ என்றும் அழைக்கப்படும் நேபாளத்தை சேர்ந்த புகழ்பெற்ற மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா, 2019ஆம் ஆண்டில் உலகின் மிக உயர்ந்த 14 சிகரங்களையும் 189 நாள்களில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.

இவரது மலையேற்ற சாதனைகள் நெட்பிளிக்ஸில் “14 Peaks: Nothing is Impossible” என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியாகியுள்ளது.

பிராட் பீக்

இந்தநிலையில், நிர்மல் புர்ஜா தலைமையிலான மலையேற்ற குழு, வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான ‘பிராட் பீக்’ சிகரத்தில் ஜூலை 30 அன்று ஏறத் தொடங்கினர். இந்த மலைச்சிகரங்களில் ஏற உலகில் பல பகுதிகளில் இருந்தும் வீரர்கள் வந்து செல்கின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து 8,047 மீட்டர் உயரத்தில் ‘பிராட் பீக்’ மலைச்சிகரம் அமைந்துள்ளது. இது உலகின் 12 ஆவது மிக உயரமான மலைச்சிகரமாகும். அங்கு அவ்வப்போது பலத்த மழையும் கடும் பனிப்பொழிவும் ஏற்படும்.

பயங்கர பனிச்சரிவு

இந்தநிலையில், இங்கு நேற்று (ஜூலை 30) ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, உலகப் புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து ‘ஆல்பைன் கிளப் ஆப் பாகிஸ்தான்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,

‘நிம்ஸ் டாய்’ தலைமையில் சென்ற 10 பேர் அடங்கிய சர்வதேச மலையேற்ற குழு ஒன்று பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும், அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாயமானவர்களில் 6 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள், 1 பாகிஸ்தானியர், 1 ஓமானி, 1 அமெரிக்கர் மற்றும் 1 நபர் சீனவை சேர்ந்தவர் என்று தகவல் வெளியானது.

 

Comments