Offline
Menu
அமெரிக்க விசா நேர்காணல்: விதிமுறையில் திடீர் மாற்றம்
By Administrator
Published on 08/17/2026 15:00
News

புதுடெல்லி,அமெரிக்க விசா பெறுவதற்கான நேர்காணல் நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கும் நேர்காணல் கட்டாயம்

இந்தியாவில் பிறந்த குழந்தைகள் முதல் 17 வயது வரையிலான சிறுவர், சிறுமிகள், விசா நேர்காணலுக்கு பெற்றோருடன் கட்டாயம் நேரில் வர வேண்டும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

முன்பு இருந்த நடைமுறை மாற்றம்

முன்னதாக 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளின் விசா விண்ணப்பத்திற்காக அவர்களை நேரில் அழைத்து வர வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர்கள் மட்டும் நேர்காணல் மையத்துக்கு சென்று விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து வந்தனர்.

தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பிறந்த குழந்தைகள் முதல் 17 வயது வரையிலான அனைவரும் பெற்றோருடன் நேரில் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த புதிய விதிமுறை காரணமாக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள், நேர்காணல் தேதியில் குழந்தைகளையும் கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும்.

Comments