Offline
Menu
சுங்கைப் பேராக் ஆற்றில் பெட்டிக்குள் கிடந்த பெண்ணின் சடலம்
By Administrator
Published on 08/21/2026 14:00
News

சுங்கைப் பேராக் ஆற்றில் ஜேட்டி லெம்பா பகுதிக்கு அருகே, பயணப் பெட்டி ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் இன்னமும் மர்மமாகவே உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட இந்தச் சடலம் குறித்துக் கோலா கங்சார் மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹேஷாம் ஹருன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசியப் பதிவுத் துறையின் தரவுத்தளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கைரேகை விவரங்கள் எதுவும் பதிவாகவில்லை.

அந்தப் பெண்ணின் உடலில் ‘BCG’ தடுப்பூசி போட்ட தழும்பு இல்லாததால், அவர் மலேசியாவைச் சேர்ந்தவர் அல்ல (வெளிநாட்டவர்) என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்.

தைப்பிங் மருத்துவமனையின் தடயவியல் துறை மேற்கொண்ட உடற்கூறாய்வில் அவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும்.,உடல் அமைப்பு: 154 செ.மீ உயரம், 48 கிலோ எடை, மாநிறம் மற்றும் தோள்பட்டை வரை நீண்ட கருப்பு முடி மற்றும் அவர் வெள்ளை மற்றும் கருப்பு கோடு போட்ட நீண்ட கை சட்டை, கருப்பு ஜீன்ஸ் மற்றும் காதணிகள் அணிந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கொலை வழக்காக (குற்றவியல் சட்டப்பிரிவு 302) வகைப்படுத்தப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காணாமல் போன உறவினர்கள் அல்லது இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள், கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Comments