Offline
Menu
டீசல் மானிய மாற்றங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும்: அர்மிசான்
By Administrator
Published on 08/23/2026 18:28
News

பாப்பர்: டீசல் மானியத் திட்டத்தில் செய்யப்படவுள்ள மேம்பாடுகள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள் அறிவிக்கப்படும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அர்மிசான் முகமது அலி இன்று தெரிவித்தார். மானியங்களைக் கையாளும் பொறுப்புள்ள நிதி அமைச்சகத்திற்கு, அமைச்சகம் மற்றும் சபா, சரவாக் மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

முன்னர் மதிப்பிடப்பட்ட ஒன்று முதல் இரண்டு மாத காலக்கெடுவை விட முன்னதாகவே இந்த அறிவிப்பை வெளியிட முடியும் என்று அமைச்சகம் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். “மானியத்தின் செயலாக்கம் மக்களின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக பல மேம்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த வாரம், நிதி அமைச்சர் II அமீர் ஹம்ஸா அஜிஸான், இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியத் திட்டத்தில் பல மேம்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவை அடுத்த ஒன்று முதல் இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த மேம்பாடுகளில், எளிமையான விண்ணப்ப செயல்முறை, தவணை முறையில் வாங்கும் வாகனங்கள் தொடர்பான தகுதி நிபந்தனைகளைத் தளர்த்துதல் மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஒதுக்கீட்டை மாற்றுதல் ஆகியவை அடங்கும்.

Comments