Offline
Menu
‘அயர்ன்மேன்’ போட்டியை நிறைவு செய்து அசத்திய 60 வயது முதியவர்
By Administrator
Published on 11/23/2026 13:00
News
விலையுயர்ந்த காலணிகள் இல்லை; ஆனால் ‘விலைமதிப்பற்ற’ மன உறுதி

பெட்டாலிங் ஜெயா:

ஆயிரக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள நவீன விளையாட்டு உபகரணங்களோ, விலையுயர்ந்த காலணிகளோ இன்றி, மிகவும் எளிமையான தோற்றத்தில் “Ironman 70.3 Langkawi” போட்டியை 7 மணி நேரம் 19 நிமிடங்கள் 57 வினாடிகளில் நிறைவு செய்த 60 வயது முதியவருக்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

பொதுவாக இத்தகைய கடினமான போட்டிகளில் பங்கேற்பவர்கள், தங்களின் வேகத்தையும் திறனையும் அதிகரிக்க நவீன உபகரணங்களையும், விலையுயர்ந்த காலணிகளையும் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், ‘பக் சிக் அரிஃபின்’ என அன்போடு அழைக்கப்படும் 60 வயதான அரிஃபின் அப்துல் மனான் இதற்கு விதிவிலக்காகத் திகழ்ந்துள்ளார்.

தலையில் குல்லாய், முழு நீள ஓட்டப் பேண்ட் மற்றும் சாதாரண கைக்கடிகாரம் என மிக எளிமையான தோற்றத்துடன் அவர் இப்போட்டியில் பங்கேற்ற வீடியோ ‘த்ரெட்ஸ்’ (Threads) சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Comments