Offline
Menu
புக்கிட் பிந்தாங் போலீஸ் சோதனையில் தப்பிய சிவப்பு நிற BMW X6! ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு!
By Administrator
Published on 11/23/2026 13:00
News

கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் சாலையில் போலீசார் மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது, சிவப்பு நிற BMW X6 சொகுசு காரை ஓட்டிவந்த நபர், போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அதிவேகமாகத் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய ஓட்டுநரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த நவம்பர் 20ஆம் தேதி அதிகாலை சுமார் 3.43 மணியளவில், கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் புக்கிட் பிந்தாங் சாலையில் வாகனச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, சம்பந்தப்பட்ட BMW X6 கார் முதலில் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட போதிலும், அதன் ஓட்டுநர் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் திடீரென காரை வேகமாகச் செலுத்தித் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தின்போது எந்தவொரு வாகன மோதலோ சாலை விபத்தோ ஏற்படவில்லை என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதுவரை சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் அடையாளம் கண்டறியப்படவில்லை என்றும், அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் துணைத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் சுஃபியான் அப்துல்லா கூறினார்.

இந்தச் சம்பவம் 1967ஆம் ஆண்டு போலீஸ் சட்டத்தின் பிரிவு 21(1)இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Comments