Offline
71 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் – வெளிநாட்டவர் கைது
Published on 09/14/2024 06:41
News

சைபர்ஜெயாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வயதான மாது ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு பலியானதோடு அவரிடம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 71 வயதான அம்மூதாட்டி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) நள்ளிரவு 12.18 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்ததாக சிப்பாங் மாவட்ட OCPD உதவி ஆணையர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

அபார்ட்மெண்டின் படிக்கட்டுகளில் ஒரு வெளிநாட்டவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார். தாக்குதல் செய்தவர் அவரது பணப்பை மற்றும் பிற பொருட்களையும் திருடிவிட்டார் என்று அவர் வெள்ளிக்கிழமை ஒரு புகாரில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மதியம் 12.20 மணியளவில் 25 வயதுடைய சந்தேகநபரை  போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளோம் என்றார். சந்தேக நபர் சனிக்கிழமை (செப்டம்பர் 14) விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

இந்த வழக்கை ஊகிக்கவோ அல்லது போலியான செய்திகளைப் பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

Comments