Offline
Menu
மலையேறும் போது 2 மீட்டர் வடிகால் குழியில் விழுந்து உயிரிழந்த மாது
Published on 09/18/2024 00:13
News

பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் மலையேற்றதில் ஈடுபட்டிருந்தபோது  இரண்டு மீட்டர் ஆழமுள்ள வடிகால் குழியில் விழுந்து மலையேறுபவர் ஒருவர் உயிரிழந்தார். Oh Ai Chin என அடையாளம் காணப்பட்ட 50 வயது பெண், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

புக்கிட் மெர்தாஜாம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், இன்று மதியம் சுமார் 1 மணியளவில் மலையேறுபவர் பற்றிய பேரிடர் அழைப்பு வந்ததாகக் கூறியது. ஆபரேஷன்ஸ் கமாண்டர் அஸ்மி ஸக்காரியா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று ஜாலான் கோலம் செரோக் டோக் குன் என்ற இடத்தில் சம்பவ இடத்திற்கு சென்றது. மலையேற்றத்தின் போது வடிகால் துளைக்குள் விழுந்ததாக நம்பப்படும் பாதிக்கப்பட்டவரை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு காவல்துறைக்கு உதவியது என்று திணைக்களம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Comments