Offline
குபாங் பாசுவில் திடீர் வெள்ளம்: 53 பேர் நிவாரண மையத்தில் தஞ்சம்
News
Published on 09/18/2024

ஜித்ரா:

முக்கிம் மலாவில் உள்ள மூன்று கிராமங்கள் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட 53 பேரைத் தங்கவைப்பதற்காக செக்கோலா கெபாங்சான் (SK) மலாவில் ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேரும் நேற்றிரவு 9.16க்கு திறக்கப்பட்ட குறித்த நிவாரண மையத்தில் பாதுகாப்பாக உள்ளதாக குபாங் பாசு மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரி, கேப்டன் (PA) முகமட் அடெனின் சுஹைமி கூறினார்.

“குபாங் பாசுவில், பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தற்போது களத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் எந்த நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

நேற்று காலை முதல் மாலை வரை பெய்த கனமழையால் குபாங் பாசு மாவட்டத்தில் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments