ஈப்போ: மதுபோதையில் வாகனமோட்ட முடியாமல் காரில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் கொள்ளையடிக்கப்பட்டது- ஆனால் கொள்ளை சம்பவத்திற்குப் பிறகு மீண்டும் தூங்கினார். பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸிஸி மாட் அரிஸ் மேலும் கூறுகையில், செப்டம்பர் 17 ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் ஜாலான் சுல்தான் நஸ்ரின் ஷாவில் 60 வயது முதியவரிடம் இருவர் கொள்ளையிட்டனர்.
அவர் மதுபோதையில் சாலையோரம் நின்றார். அதிகாலை 5.10 மணியளவில், இரண்டு சந்தேக நபர்கள் அவரது காரின் பின்புற கண்ணாடியை உடைத்தபோது அவருக்கு விழிப்பு வந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் மொபைல் போன் மற்றும் கார் சாவிகள் திருடப்பட்டுள்ளன.
அப்பொழுது குடிபோதையில் இருந்த பாதிக்கப்பட்டவர் மீண்டும் தூங்கிவிட்டார். காலை 8 மணியளவில், ஒரு வழிப்போக்கர் அவரை எழுப்பினார். அவர் தனது காரின் மற்றொரு சாவியைப் பெறுவதற்காக அவரது மனைவியைத் தொடர்பு கொண்டார் என்று அவர் கூறினார். இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 392இன் கீழ் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி விசாரணை நடத்தப்பட்டு, மர்ம நபர்களைத் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.