Offline
பலத்த காற்று: சபாவின் மிக உயரமான தேவாலய சிலுவை சேதம்
Published on 09/20/2024 01:29
News

கோலாலம்பூர்:

கூடாட்டில் உள்ள Sacred Heart தேவாலயத்தில் உள்ள சபாவின் மிக உயரமான சிலுவை நேற்று (செப்டம்பர் 18) மதியம் வீசிய பலத்த காற்றில் சிக்கி தரையில் விழுந்தது.

சிலுவை கிழே விழுந்ததில் தேவாலயத்தின் முன் பகுதி சேதம் அடைந்ததாக போர்னியோ போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தீபகற்ப மலேசியாவின் தெற்கிலும் சபாவின் மேற்குக் கடற்கரையிலும் “காற்றின் செறிவு” காரணமாக இவ்வாறான வானிலை ஏற்பட்டதாக அதன் இயக்குனர் அமீர்சுடி ஹாஷிம் உறுதிப்படுத்தினார்.

Comments