Offline
பலாத்காரம் செய்த சிறுமியை ஜாமீனில் வந்து சுட்டுக் கொன்ற குற்றவாளி.. தாயின் கண்முன் நடந்த கொடூரம்
Published on 09/22/2024 06:48
News

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஜாமீனில் வெளியே வந்து அந்த சிறுமியை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வந்த ரிங்கு[Rinku] என்ற நபர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்ஸோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்நிலையில் ஜாமீன் வாங்கிக்கொண்டு ரிங்கு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று இரவு சம்பல் பகுதியில் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது தனது நண்பனுடன் அவர்களை வழிமறித்த ரிங்கு சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளான். தனது தாய் மற்றும் சகோதரனின் கண்முன்னையே சிறுமி குண்டடிபட்டு உயிரிழந்தாள். இதனையடுத்து தலைமறைவாகிய ரிங்குவை போலீஸார் தேடி  வருகின்றனர்.

Comments