Offline
திருப்பதி: சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு
Published on 01/17/2025 16:09
News

திருப்பதி, ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த சீனிவாசலு, தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார். இலவச தரிசன டோக்கன் பெற்று, தலைமுடி காணிக்கை செலுத்திவிட்டு அங்கு முதல் மாடியில் உள்ள வராண்டாவில் காத்திருந்துள்ளனர்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சீனிவாசலுவின் 3 வயது மகன் சாத்விக், தடுப்பு கம்பியின் இடைவெளி வழியாக முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments