பத்துமலை தேவஸ்தானத் தலைவர் டான்ஷ்ரீ நடராஜா, 5 லட்சம் வெள்ளி நிதி ஊராட்சித் துறையிடம் வழங்கப்பட்டு பின்னர் தேவஸ்தானத்திற்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் அதை நேரடியாக வழங்கினால் அதற்கு உடனடி பயன்பாடு இருக்கும் என கூறினார். நிதி ஊராட்சித் துறையிடமிருந்து எப்போது கிடைக்கும் என தெரியாது என்ற அவர், இந்த ஆண்டு பத்துமலையில் பல மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டு, இன்னும் பல திட்டங்கள் செய்யப்படவுள்ளதாக அறிவித்தார்.