ஈப்போ,
பேராக் மாநில அரசாங்கத்தின் முழு ஆதரவுடன், வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஈப்போ தைப்பூசம் விழா சிறப்பாக நடத்தப்படுவதாக மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்துள்ளார்.
இவ்விழா முன்னிட்டு, தற்காலிகக் கூடாரங்கள் அமைப்பதற்கு மாநகர் மன்றத்தின் அனுமதி தேவை எனவும், மதுபான விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு, 50 ஆயிரம் பேர் பால் குடம் சுமந்து காணிக்கை செலுத்த உள்ளனர், மற்றும் சுமார் லட்சம் பேர் இந்த விழாவில் கலந்துகொள்ளுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.