Offline
எகிப்து: குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 10 பேர் பலி
Published on 02/19/2025 11:32
News

கெய்ரோ,எகிப்து நாட்டின் கிசா மாகாணம் கெர்டாசா நகரில் குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வசித்து வந்த பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த கட்டிட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கியாஸ் சிலிண்டர் வெடித்து குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments